கேகாலை மாவட்டத்தில் டோக் இன குரங்குகளை கட்டுப்படுத்தும் நோக்கில் விவசாயிகளுக்கு உயர்தர ஏர் ரைபிள் துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் குறிப்பாக கேகாலை மாவட்டத்தில் குரங்குகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பாடசாலை சிறுவர்கள் கூட உணவை கைகளில் வைத்திருக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது.
குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கால்நடை அதிகாரிகளுடன் பலமுறை கலந்துரையாடலில் ஈடுபட்ட நிலையில் பிரச்சினைக்குத் தீர்வுகாண நான் தனிப்பட்ட முறையில் தலையிட்டுள்ளேன். எவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டாலும் எனது தீர்மானத்தில் மாற்றம் இல்லை.
கேகாலை மாவட்டத்தில் உள்ள 600 விவசாய அமைப்புகளுக்கு ஏர் ரைபிள் துப்பாக்கிகளை வழங்கவுள்ளேன். டோக் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்த அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதையே இந்த முயற்சியின் நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

