புறக்கோட்டை பஸ்ரியன் மாவத்தை கழிப்பறைக் கட்டணம் அதிகரிப்பு!

167 0

கொழும்பு புறக்கோட்டை பஸ்ரியன்  மாவத்தை  தனியார் பஸ் நிலையத்தில்  உள்ள கழிவறைகளுக்கான   கட்டணம் ரூபா 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்பு இந்த பொதுக் கழிப்பறையில் சிறுநீர் கழித்தல் உள்ளிட்ட உடல் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு நபருக்கு 40 ரூபா கட்டணம் வசூலிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் பொதுக் கழிவறையின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.