சுரங்கப்பாதைக்குள் ஹமாஸ்தலைவர் – வீடியோவொன்றை வெளியிட்டது இஸ்ரேல்

156 0

ஹமாஸ்அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வர் கான்யூனிசில் சுரங்கப்பாதையொன்றிற்குள் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோ என தெரிவித்து இஸ்ரேல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் தலைவர் தனது குடும்பத்தினருடன் காணப்படும் வீடியோஒன்றையே இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

 

ஒக்டோபர் பத்தாம் திகதி ஹமாஸ் அமைப்பின் சிசிடிவியில் பதியப்பட்டஇந்த வீடியோ சமீபத்திலேயே இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கு கிடைத்துள்ளது என இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சுரங்கப்பாதை ஊடாக அவர் இவ்வாறே தனது குடும்பத்தினருடன் தப்பி ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த பாதுகாப்பான தங்குமிடத்திற்கு சென்றார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அந்த வீடியோவில் காணப்படுபவர் ஹமாஸ் அமைப்பின் தலைவரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ள சிஎன்என்  அவர் உயிருடனோ அல்லது பிணமாகவே கைப்பற்றப்படும்வரை தேடுதல் வேட்டை முடிவடையாது  நாங்கள் அவரை கைதுசெய்வது குறித்து உறுதியாக உள்ளோம் நிச்சயம் கைதுசெய்வோம் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஹமாஸ் தலைவர் மறைந்திருந்த சுரங்கப்பாதையொன்றிற்குள்இஸ்ரேலிய படையினர் காணப்படும் வீடியோ ஒன்றையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

சின்வரின் முக்கிய பதுங்குமிடம் அது அவர் அங்கு சமீபநாட்களில் காணப்பட்டார் என இஸ்ரேலிய இராணுவவீரர் ஒருவர் அந்த வீடியோவில் தெரிவிக்கின்றார்,படுக்கையறைகள் சமையலறைகள் போன்றவற்றையும் அந்த வீடியோ காண்பிக்கின்றது

மில்லியன் கணக்கில் டொலர்களையும் அங்கு காணமுடிந்ததாக படையினர் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் வருவது தெரிந்ததும் அவர்கள் தப்பிவிட்டனர் என  இஸ்ரேலிய படைவீரர் தெரிவித்துள்ளார்.