கால நீடிப்பில் நிறைவேற்ற வேண்டிய விடயங்களை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும்- சாளில்செட்டி (காணொளி)

301 0

 

ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கால நீடிப்பில் நிறைவேற்ற வேண்டிய விடயங்களை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என இந்த சந்திப்பில் சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் சாளில்செட்டி தெரிவித்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள கால நீடிப்பு தொடர்பில் பேசியிருந்தோம்.

அதேபோல் நாட்டின் பிரதமரையும் கூட சந்தித்து காலநீடிப்பு தொடர்பில் பேசியிருந்தோம்.

ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால நீடிப்பானது பல விடயங்களை நடைமுறைபடுத்துவதற்காகவே வழங்கப்பட்டுள்ளது.

எனவே அந்த விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் போன்ற பல விடயங்களை நிறைவேற்றுவதற்காகவே இந்த கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கால நீடிப்பில் இவற்றை அரசாங்கம் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

முன்று நாள் விஜயமாக வருகைதந்த நாம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் பகுதிக்கும் விஜயம் மேற்கொண்டு அங்கே இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தமது நிலங்களை மீட்க போராடும் மக்களை சந்தித்திருந்தோம்.

அதேபோல் தமது சகோதரர்கள், உறவுகளை தொலைத்த, உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் கலந்துகொண்டு அவர்களது விடயங்களையும் நாம் அறிந்துகொண்டோம்