மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையினர்!

177 0

மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த நிலையத்துக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையினால் நேற்று செவ்வாய்க்கிழமை (13) மீண்டும் மொத்த வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டதாக மெகொடை வர்த்தக சங்கத்தின் தலைவர் சமிந்த ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில்  உள்ள  கடை ஒன்றுக்குள்  இருவர் நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொள்ளையடித்த  சம்பவம் இடம்பெற்றபோது  அங்குள்ள சோதனைச் சாவடியில் கடமையாற்றிய ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்றபோது, மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தின் பாதுகாப்புக்காக  இருபதுக்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும், சம்பவம் இடம்பெற்ற போது ஐவர் மாத்திரமே பணியிலிருந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போது விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில்  ஈடுபட்டள்ளதாகவும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.