27 வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீள்கிறது ஊறணி

315 0
27 வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீள்கிறது ஊறணி. வெள்ளிக்கிழமை விடுவிப்பு.
படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த வலிகாமம் வடக்கு – ஊறணி பகுதி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மக்களின் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்படவுள்ளது.
கடந்த மாதம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருக்கும் ஊறணி மற்றும் மயிலிட்டிதுறை ஆகிய பகுதிகளில் சுமார் 28.8 ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் இறுதிக்குள் மக்களிடம் மீள கையளிக்கப்படவுள்ளதாக கடந்த மாதம் செய்தி வெளியாகியிருந்மை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஊறணி பகுதி விடுவிக்கப்படவுள்ள தகவல் பலாலி இராணுவ கட்டளை   ஊடகப் பிரிவினரால் நேற்று மாலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஊறணி பகுதி இரண்டு கட்டமாக அண்மையில் விடுவிக்கப்பட்டது கடந்த தை மாதம் 14ம் திகதி கரையோரமாக 2 கிலோ மீற்றர் நீளமான பகுதியும் தரையில் 2 ஏக்கர் நிலமும் பெப்ரவரியில் 500 மீற்றர் நீளமான கரையோரப்பகுதி கையளிக்கப்பட்டிருந்தது.
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 27 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த காணிகள் சிறிது சிறிதாக விடுவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.