ரஃபாவில் இஸ்ரேலின் விமானதாக்குதலில் 40க்கும் அதிகமானவர்கள் பலி

23 0

ரஃபாவில்  மேற்கொண்ட நடவடிக்கையின் போது இரண்டு பணயக்கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ள அதேவேளை அந்த நகரத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 40க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் விமானதாக்குதலினால் உயிரிழந்த 20 பாலஸ்தீனியர்களின் உடல்கள் குவைத் மருத்துவமனையில் உள்ளன என ரொய்ட்டருக்கு  தெரிவித்துள்ள காசாவின் சுகாதார அதிகாரிகள் 12 உடல்கள் ஐரோப்பிய மருத்துவமனையிலும் ஐந்து உடல்கள் அபுயூசுவ் அல் நசார் மருத்துவமனையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குண்டுவீச்சினால்  இரண்டு மசூதிகளும் பலவீடுகளும் சேதமடைந்துள்ளன என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவளை காசாவின் தென்பகுதியில் உள்ள ரஃபாவில்  மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இருவர்மீட்கப்பட்டுள்ளனர்  என தெரிவித்துள்ள இஸ்ரேல் அவர்கள் இஸ்ரேலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளன.