குடு ரொஷானும் சகோதரரும் பிணையில் விடுதலை!

138 0

வரக்காபொல பிரதேசத்தில் மறைந்திருந்தபோது யுக்திய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குடு ரொஷான் மற்றும் அவரது   சகோதரர் ஆகியோர் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை (07) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குடு ரொஷானுக்கு 3 கோடி ரூபா ரொக்கப் பிணையாகவும், மற்றைய சந்தேக நபருக்கு 50 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையாகவும் நீதிமன்றம் நிர்ணயித்து விடுதலை செய்ய உத்தரவிட்டது.

மேலும், குடு ரொஷானுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 7 சரீரப் பிணைகளும் அவரது சகோதரருக்கு தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான  நான்கு பிணைகளும்  விதித்து உத்தரவிடப்பட்டது.