விஷ வாயு தாக்கி மீனவர் பலி – மேலும் எழுவர் வைத்தியசாலையில்

137 0

அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகின் மீன் தொட்டிக்குள் விஷ வாயுவை சுவாசித்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விஷ வாயுவை சுவாசித்த 08 மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனைய 7 மீனவர்களும் தற்போது பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.