இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி தயா சந்தகிரி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டதுடன் கட்சியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவும் அண்மையில் மக்கள் சக்தியில் இணைந்து கொண்டமை தெரிந்ததே.

