மறைந்த நடிகர் விஜயகாந்தின் நினைவாக அவரது மனைவி பிரேமலதா உருவப்படத்தை வலது கையில் பச்சை குத்தியுள்ளார்.
நடிகரும் தேமுதிக கட்சியிக் தலைவருமான விஜயகாந்த் கடந்த வருடம் டிசம்பர் 28ஆம் திகதி காலமான நிலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் பலரும் அஞ்சலி செலுத்தி வருவதுடன் பிரேமலதாவுக்கு நேரில் ஆறுதலும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பிரேமலதா தனது கணவர் விஜயகாந்த்தின் உருவத்தை தன்னுடைய வலது கையில் பச்சை குத்தியுள்ளார். அழகாக பச்சை குத்தப்பட்டுள்ள விஜயகாந்தின் உருவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

