பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்: தேர்தல் தேதிக்கு முன்னதாக அறிவிப்பு?

57 0

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அதனை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்கள் அமைத்து களத்தில் இறங்கி உள்ளனர்.

தேர்தல் அறிக்கை தயாரிப்பது, கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை என பல்வேறு பணிகளில் அவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து டெல்லியில் பாஜக தலைமை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே தமிழகத்தில்பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், முக்கிய நிர்வாகிகள் போட்டியிடும் முதல் கட்ட பட்டியல் வெளியாகும் எனவும் கோவையில் நடந்த கூட்டத்தில் பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது .