வரி அடையாள எண்ணை பெறுவதற்கான முறையில் திருத்தம்

31 0

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி அடையாள எண்ணை பெறுவதற்காக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட முறையில் நிதி அமைச்சகம் திருத்தங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த முறையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து உள்நாட்டு இறைவரித்துறை அதிகாரிகளின் முறைப்பாட்டை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முறையை அறிமுகப்படுத்துவதற்கு சுமார் 2.5 பில்லியன் ரூபா தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் எண்ணை வைத்திருப்பவருக்கு அஞ்சல் மூலமே அதனை தெரிவிக்க வேண்டியுள்ளது.எனினும் இந்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கு தங்களுக்கு மனித வளம் இல்லை என இறைவரித்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த செயல்முறைக்காக ஒரு நாளைக்கு 1,500 ரூபாய் கொடுப்பனவுடன் இளங்கலை பட்டதாரிகளை தற்காலிக அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்தநிலையில் இந்த முறையை கட்டாயமாக்குவதற்கு ஒரு வருடம் தேவை என்று உள்நாட்டு இறைவரி சேவை சங்கத்தின் செயலாளர் எச்.ஏ.எல். உதயசிறி தெரிவித்துள்ளார்.

ஆட்பதிவுத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் வங்கிகளின் தரவுத்தளங்களுடன் இந்த அமைப்பு இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.