சில புகையிரத நிலையங்களில் புகையிரதம் நிறுத்தப்படமாட்டாது !

112 0

சுதந்திர தினத்தில் நிகழ்வுகளில் பங்குப்பற்றுபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில்   நாளை   (ஞாயிற்றுக்கிழமை) காலை 05 மணிமுதல் 09 வரையான காலப்பகுதியில் செயலக புகையிரத நிலையம்,கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி ஆகிய புகையிரத நிலையங்களில் புகையிரதம் நிறுத்தப்படமாட்டாது என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் நாளை   (ஞாயிற்றுக்கிழமை)  காலை ஜனாதிபதி, பிரதமர், அரசியல் பிரமுகர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆகியோரின் பங்குப்பற்றலுடன் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் கலந்துக் கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் நாளை  மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை)  காலை 05 மணி முதல்  09 மணி வரையான காலப்பகுதியில் கரையோர புகையிரத சேவையில் செயலக பிரிவு புகையிரத நிலையம்,கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி ஆகிய புகையிரத நிலையங்களில்  புகையிரதம்  நிறுத்தப்படமாட்டாது.