ஜோர்தான் ஆளில்லா விமானதாக்குதலிற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து தான் தீர்மானித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவதளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலில் மூன்று அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையிலேயே பைடன் இதனை தெரிவித்துள்ளார்.
ஜோர்தான் சிரிய எல்லையிலுள்ள அமெரிக்க தளத்தின் மீது இடம்பெற்ற தாக்குதலிற்கு ஈரானே காரணம் என தான் உறுதியாக கருதுவதாக ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
கட்டாய்ப் ஹெஸ்புல்லா என்ற அமைப்பிற்கு ஈரான் ஆயுதங்களை வி;ற்பனை செய்வதை அடிப்படையாக வைத்து இந்த முடிவிற்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்..
டவர் 22 தளத்தின் மீதான தாக்குதலிற்கும் ஈரானிற்கும் நேரடிதொடர்புள்ளதை உறுதி செய்துள்ளீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விகளிற்கு பதிலளித்துள்ள பைடன் அது குறித்து நாங்கள் ஆராய்வோம் அதேவேளை மத்தியகிழக்கில் ஒரு பரந்துபட்ட யுத்தம் அவசியம் என நான் கருதவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

