நாட்டுக்கு தேவையான தீர்மானங்களை தைரியமாக எடுக்க கூடிய ஒரே தலைவர் ரணில் விக்மசிங்க!

185 0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு கொள்கைக்கு மட்டுமின்றி அர்ப்பணிப்புடன் செயற்படும் தலைவர் அந்த அர்ப்பணிப்புகளின் அடிப்படையில் நாட்டிற்கு வெற்றிகளை பெற்றுத்தர அவர்  தொடர்ந்து உழைத்து வருகிறார். நாட்டுக்கு தேவையான தீர்மானங்களை தைரியமாக எடுக்க முடியுமான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே  என தொழில்  மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தொழில்  மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் “இலங்கையை வெற்றி கொள்வோம் “மக்கள்  நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டத்தை   நிகழ்வு நேற்று அநுராதபுரம் சல்காது  விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையை வெற்றிகொள்ளும் திட்டமானது நடமாடும்  சேவை அல்ல. மாறாக  நாட்டை பொருளாதார ரீதியில் உயர்த்தும் தீர்வாக  அறியப்படுகிறது. இது போன்ற இரண்டு நிகழ்வுகளை காலி மற்றும்  யாழ்ப்பாணத்தில் நடத்தினோம்.

கொள்கைகளுக்கு வாக்களித்தமையலே நாடு வங்குரோத்து  நிலைக்கு வந்தது. ஆனால் என்னிடம்  எப்போதும் இருந்த தீர்வு  நாட்டிற்கு வெற்றியைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை நான் பிரதிநிதித்துவப்படுத்தினேன். மக்களுக்கு வெற்றியைக் கொண்டுவரும் வாய்ப்பிற்காக நான் நின்றேன். இந்த நாட்டின் எதிர்காலத்தை வெல்லக் கூடிய தலைமைக்காக நான் இன்று நிற்கிறேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் நிலைமை அனைவருக்கும் நினைவிருக்கும் . என்றாலும் தற்போதைய சாதகமான நிலைக்கு ஜனாதிபதி நாட்டைக் கொண்டு வந்திருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.  ரணில் கொள்கைகளின் பால் மாத்திரம் இருக்காமல் சிறந்த முடிவுகளை தைரியமாக எடுக்க முடியுமான  தலைவர். கொள்கைகள் மாறுகின்றன. ஆனால் முடிவுகள் வளர்ந்து வருகின்றன. அதனால் மக்களை காப்பாற்றக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமாகும்.

அத்துடன் நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையும் போது, ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப உதவுவதற்குப் பதிலாக, அரசியல்வாதிகள். மக்களை மகிழ்விக்கும் முடிவுகளை எடுத்தார்கள். இந்த நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையும் வரை இந்த நாட்டில்  முறைமாற்றத்தை ஏற்படுத்த யாரும் இருக்கவில்லை. நாடு வீழ்ந்த  பிறகுதான் இவர்கள்  மாற்றத்தை ஏற்படுத்த முனைகிறார்கள்   அந்த நேரத்தில்தான் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக  உழைத்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

எரிபொருள், எரிவாயு வரிசை யுகத்தை இல்லாது செய்தோம். நிதி ஒழுக்கம்  ஏற்படுத்தப்பட்டது. அதிகார ஆட்சி ஒழிக்கப்பட்டது. பொருளாதாரப் பேரழிவிலிருந்து நாட்டை மீட்பதற்கான தொலைநோக்குப் பார்வையை ஜனாதிபதி எமக்குக் காட்டியுள்ளார் .நாங்கள் சொர்க்கத்தில் இருந்து அரசியலுக்கு வரவில்லை. அடிமட்டத்திலிருந்து   அரசியல் செய்து வருபவர்கள் அதனாலே களத்தில் அரசியல் செய்ய விரும்புகிறோம்.

மேலும் வெளிநாடு வாழ் தொழிலார்கள் சட்டரீதியாக பணத்தை  வங்கி  மூலம்  நாட்டுக்கு கொண்டு வரும் முறையை முதலில் உருவாக்கி நாட்டுக்கு வரும் டொலர்களை  அரசியல்வாதிகள்  கொள்ளையடிக்கின்றனர் என்ற  பொய் குற்றச்சாட்டு  இல்லாதொழிக்கப்பட்டது . வெளிநாட்டு தொழிலார்களினாலே நாம் இன்று பொருளாதார காற்றை சுவாசிக்கிறோம்

எனவே இந்த ஆண்டு தொழில் முனைவோரை மேம்படுத்தும் ஆண்டாக பெயரிடப்பட்டு, வெளிநாட்டில் இருந்து வரும் தொழிலாளிகளை தொழில்முனைவோராக உயர்த்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது .

மேலும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்க 22 மில்லியனை வழங்கியுள்ளோம்,  நாட்டை கட்டியெழுப்ப தேவையான வேலைத்திட்டத்தை நாங்கள் செய்து வருகிறோம் என்றார்.