ஆசிரியர் தலையங்கம்
-
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் புதிய சட்டத்தின் ஆபத்துகளும்!
February 15, 2026 -
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026

ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் வரையிலான கிரானைட் ஏற்றுமதிக்கான சாத்தியம் மற்றும் சரியான தன்மை குறித்த உண்மைகளை ஆய்வு செய்து பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்பிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.தற்போது நாட்டில் நிர்மாண மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கிரானைட் தேவை குறைந்துள்ளதாகவும், கிரானைட் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூகங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக நிர்மாணப் பணியின் போது அகற்றப்பட்ட கிரானைட் கற்கள் தற்போது துறைமுகப் பகுதியின் நிர்வாக கட்டிடத்திற்கு அருகாமையிலும் ஹம்பாந்தோட்டை புதிய வைத்தியசாலை வளாகத்திலும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி கிரானைட் கற்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.சுற்றாடல் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் மேற்பார்வையின் கீழ் மேற்படி கிரானைட் கையிருப்புகளை உடனடியாக ஏற்றுமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.