விபத்துக்குள்ளான பாராசூட் வீரர்களின் நிலைமை தொடர்பில் விமானப்படை விளக்கம்

122 0

சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகை நிகழ்வுகளின் போது விபத்துக்குள்ளான  பராசூட்  வீரர்களுக்கு பாரியளவில் பாதிப்பு இல்லை என  விமானப்படை தெரிவித்துள்ளது.

காயமடைந்த நான்கு பராசூட் வீரர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை சுதந்திர தின ஒத்திகையில் பங்குபற்றிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த  பராசூட் வீரர்களில் இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு பராசூட் வீரர்களும் விமானப்படையின் இரண்டு பராசூட் வீரர்களும் விபத்துக்குள்ளாகி காயமடைந்தனர்.

காற்றின் திசையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .