கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெறும் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியின்போது காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு பொது நூலகத்துக்கு அருகில் பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டமை தெரிந்ததே.

