போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியர்களை எதிர்வரும் 8 ம் திகதிவரை பொலீஸ் காவலில்

334 0
காங்கேசன்துறைக் கடற்பரப்பில் நேற்று முன்தினம் அதிகாலையில் கெரோயினுடன்  கைது செய்யப்பட 6 இந்தியப் பிரயைகளையும் எதிர் வரும் 8ம் திகதி வரையில் பொலிசாரின் தடுப்பில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
காங்கேசன் துறையில் இருந்து 17 கடல் மைல் தொலைவில் வைத்து கைப்பற்றப்பட்ட படகினில் 13.5 கிலோ கரோயின் கடத்தப்பட்டவேளையில் 6 இந்தியப் பிரயைகளும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். குறித்த ஆறு இந்தியர்களும் கடற்படையினரால் காங்கேசன்துறைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்
இதன் பிரகாரம் காங்கேசன்துறைப் பொலிசார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த 6 இந்தியர்களையும் நேற்றைய தினம் மல்லாகம் நீதிமன்றில் ஆயர் செய்தனர். இதன்போது குறித்த 6 இந்தியர்களிடமும்  தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளவேண்டியுள்ளதனால் சிறைச்சாலைக்கு அனுப்பாது  பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கு மன்றிடம் அனுமதியை கோரியிருந்தனர்.
இதனை ஆராய்ந்த நீதவான் குறித்த 6 இந்தியர்களையும் தொடர்ந்தும் எதிர்வரும் 8ம் திகதிவரையும் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ள அனுமதித்தார்.