வவுனியா மாவட்டத்தில் யேர்மனி வாழ் தமிழீழமக்களின் கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டம்.

152 0

கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் வவுனியா மாவட்டத்தில் கனகராஜன்குளம் பிரதேசத்தில் 115 மாணவருக்கான கற்றல் உபகரணங்கள் யேர்மன் வாழ் தமிழீழ மக்களின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணம் மற்றும் புத்தகப் பை என்பன கனகராஜன்குளம் பெரியகுளம் பொதுநோக்கு மண்டபத்தில்வைத்து 28.01.2024 இன்று வழங்கி வைக்கப்பட்டது.  இதில் குஞ்சுக்குளம், மன்னகுளம், கனகராயன்குளம், கனகராயன்குளம் வடக்கு, ஆலங்குளம், குறிசுட்டகுளம் ஆகிய கிரமத்தைசேர்ந்த மாணவர்கள் கற்றல் உபகரணங்களை பெற்று பயன்பெற்றனர். மேற்படி நிகழ்வில் பெரியகுளம் பாடசாலைம முதல்வர், ஆலங்குளம் பாடச்லை முதல்வர், மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு  யேர்மன் வாழ் தமிழழீழமக்களிற்கு நன்றி தெரிவித்தனர்.