நிக்கவரெட்டிய வனஜீவராசிகள் திணைக்களத்திற்குட்பட்ட திவுல்லேவ திகன்னேவ பகுதியில் காட்டு யானையொன்று மின்சாரக் கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக நிக்கவரெட்டிய வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த காட்டு யானை சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த அதிவலுக் கொண்ட மின்சாரக் கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த காட்டு யானையானது சுமார் 8 அடி உயரம் உடையது எனவும் 30 வயதுடையது எனவும் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.
இதன்போது காணியின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டு நிக்கவரெட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த யானையின் உடல் நிக்கவரெட்டிய மிருக சிகிச்சைப் பிரிவின் வைத்தியரினால் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக நிக்கவரெட்டிய வனஜீவராசிகல் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.

