மனைவியை தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவருக்கு மரண தண்டனை

35 0

தனது மனைவியை தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொலை செய்த  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவர் குற்றவாளியாக காணப்பட்டதனையடுத்து  மரண தண்டனை விதித்து குளியாப்பிட்டி மேல் நீதிமன்றம் தீரப்பளித்துள்ளது .

அநுராதபுரம்  பகுதியைச் சேர்ந்த  நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி  தனது மனைவியை தாக்கி அறையொன்றில் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த் சம்வம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.