மோட்டார் சைக்கிள் – லொறி விபத்து: தந்தையும் மகனும் பலி – தாய் படுகாயம்!

172 0

ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதியில் லபுகம இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த விபத்தில் காயமடைந்த தாய் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தந்தை, மகன் மற்றும் தாயார் ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.