டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஆபத்து குறித்து அவருடன் முன்னாள் பணியாற்றிய உதவியாளர்கள் உட்பட பலர் அச்சமடைந்துள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி பில்கிளின்டனின் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நான் டிரம்பின் முன்னாள் உதவியாளர்கள் பலரிடம் பேசியுள்ளேன் அவர்கள் டிரம்பிற்கு எதிராக செயற்படுவதற்காக அமைப்புகளை உருவாக்கிவருகின்றனர் என சிட்னி புளுமென்தல் பிபிசி;க்கு தெரிவித்துள்ளார்.
இது ஒருவர் இருவரோ இல்லை டிரம்பிடம் பணியாற்றிய 100பேர் என தெரிவித்துள்ள அவர் டிரம்ப் நாட்டிற்கு உண்மையான ஆபத்து தொல்லை எனகருதுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை இடம்பெற்ற கருத்துக்கணிப்புகளில் இதுதெரியவில்லை ஆனால் இவர்கள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

