பிரபல பாதாள உலக நபரான கணேமுல்ல சஞ்சீவவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி வரை வீரகுள பொலிஸ் வளாகத்திலிருந்து மாற்றப்படக் கூடாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (24) உத்தரவு பிறப்பித்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவவின் தாயாரால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணை பெப்ரவரி 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

