சப் இன்ஸ்பெக்டரின் விளக்கமறியல் நீடிப்பு

55 0

நாரம்மலவில் லொறிச் சாரதி ஒருவரைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் சப் இன்ஸ்பெக்டரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாரம்மல நீதிமன்ற  நீதிவானின்  உத்தரவின் பேரில்  ஜனவரி 31ஆம் திகதி  வரை விளக்கமறியல்  நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில்  41 வயதான லொறியின் சாரதி ஒருவர் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து குறித்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.