பணவீக்கம் மேலும் அதிகரிக்கும்

56 0

வெட் வரி அதிகரிப்பின் காரணமாக ஜனவரி மாத பணவீக்கம் சுமார் 7% ஆக உயரலாம் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வௌியிட்ட மத்திய வங்கி ஆளுநர், “கடந்த மாதம் 4% ஆக இருந்த பணவீக்கம் வெட் வரி மற்றும் வானிலை காரணமாக இவ்வாறு அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

“எதிர்காலத்தில்,  பணவீக்க இலக்கு 5% ஆகும். சராசரி மதிப்பை 4% – 6% வரை பராமரிக்க எதிர்பார்க்கிறோம். எனவே, இந்த நேரத்தில், சந்தை வட்டி விகிதங்களை ஏதாவது ஒரு வழியில் சரிசெய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் வட்டி விகிதம் நிலையானதாக உள்ளது. அதுவரை கொள்கை வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருப்போம்.” என்றார்.