இனந்தெரியாத ஒருவரின் சடலம் மீட்பு

75 0

புத்தளம் – மதுரங்குளி களப்பு பிரதேசத்தில் இருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் அங்கு சென்ற பொலிஸாரும், புத்தளம் தடவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு களப்பு பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சடலம், நீதிவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.