இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், நுவரெலியா மாவட்டச் செயலகம், நோர்வூட் பிரதேச செயலகம் ஆகியவை இணைந்து நடத்தும் தேசிய பொங்கல் நிகழ்வு எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் வழிகாட்டலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே, அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அநிருத்தனன், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

