ஹரக்கட்டா தொடர்பில் சிஐடிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

231 0

ஹரக்கட்டா’ என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக நபரான நதுன் சிந்தக விக்கிரமரத்னவை தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து மாற்ற வேண்டுமாயின் அதனை நிறைவேற்ற வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவித்தது.

இதன்படி, அவரை இடமாற்றம் செய்வதற்கு முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் ஆகிய இரண்டின் இணக்கத்தை முதலில் பெற்றுக் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்தது.

ஹரக்கட்டாவின்  தந்தை நெல்சன் விக்கிரமரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி.என்.சமரக்கோன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஹரக்கட்டா’வுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தற்போதைய தடுப்புக்காவல் உத்தரவை மேலும் நீட்டிப்பதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவைக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது,

மேலும் இந்த மனு மீதான விசாரணைகள் ஜனவரி 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் மீண்டும் இடம்பெறவுள்ளன.