சுவிசில் சிறப்பாக நடைபெற்ற வங்கக் கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க இளையோர், பெண்கள் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2024! செய்தியும் படங்களும்.
வங்கக்கடலில் வீரகாவியமாகிய கேணல் கிட்டுவினதும் ஏனைய ஒன்பது மாவீரர்களினதும் நினைவு சுமந்து 27 வது தடவையாக தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையினால் நடத்தப்பட்ட இளையோர் மற்றும் பெண்களுக்கான உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த 14.01.2024 ஞாயிறு அன்று Bern Langnau நகரில் சிறப்பாக நடைபெற்றது.பொதுச்சுடர்,ஈகைச்சுடர் ஏற்றலை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது. காலை எட்டு முப்பது மணிக்கு ஆரம்பமாகிய ஆட்டங்கள் இரவு 8 மணி வரை நடைபெற்று பரிசளிப்புடன் இனிதே நிறைவுபெற்றது.
தமிழீழ விளையாட்டுத்துறை
சுவிஸ் கிளை







































