ஜிப்ரால்டர் ஈகிள் என்ற சரக்குகப்பல் கடும் சேதங்களிற்குள்ளாகியுள்ளது என மத்திய கிழக்கிற்கான அமெரிக்காவின் கட்டளை பீடம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த கப்பல் ஏடன் வளைகுடாவில் தொடர்ந்து பயணிக்கின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கப்பலில் இருந்த இரும்புபொருட்கள பாதிக்கப்பட்டுள்ளன எனினும் கப்பல் தொடர்ந்தும் பயணிக்கின்றது.
செங்கடல் பகுதியில் இஸ்ரேலிற்கு செல்லும் அல்லது இஸ்ரேலிற்கு சொந்தமான கப்பல்களை தாக்குவதாக தெரிவிக்கும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களிற்கான ஹமாசிற்கான ஆதரவை வெளிப்படுத்துவதற்காகவே இந்த தாக்குதல்களை முன்னெடுப்பதாக தெரிவிக்கின்றனர்.
எனினும் அமெரிக்க கப்பல்களையும் இலக்குவைக்கப்போவதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் சிரேஸ்ட அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவின் நாசகாரி கப்பலை நோக்கி ஏவிய ஏவுகணையை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.

