புதுக்குடியிருப்பில் போதைப் பொருளுக்கு அடிமையான கிராம அலுவலர் உள்ளிட்ட இருவர் கைது

147 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் போதைபொருளுக்கு அடிமையான  கிராம அலுவலர்  உள்ளிட்ட இரண்டு நபர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று  திங்கட்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைதானவரில் ஒருவர்  புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற  கிராம அலுவலர் எனவும் இவர் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினர்களுக்கும் போதை பொருட்களை வியாபாரம் செய்து வருவதாகவும்  மக்களால் பொலிஸாருக்கு  இரகசிய தகவல் வழங்கப்பட்டதையடுத்து   இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

சந்தேக நபர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது  போதை பொருளுக்கு அடிமையாகியிருந்தமை உறுதியானதாகவும்,  இன்று செவ்வாய்க்கிழமை (16)  குறித்த நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும்  புதுக்குடியிருப்பு பொலிஸார்  மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.