ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் மிஹிஜய செவன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 27 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தராவார்.
கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் மோதரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

