புத்தரையும் பௌத்த மதத்தையும் அவமதித்தவருக்கு விளக்கமறியல்!

120 0
‘அவலோகிதீஸ்வர போதிசத்துவர்’ என தன்னை அறிமுகப்படுத்தி புத்தபெருமானையும், துறவிகளையும் பௌத்த மதத்தையும் அவமதிக்கும் வகையில் பிரசாரங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்  இன்று செவ்வாய்க்கிழமை (16)  கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

புத்த பெருமானையும், பிக்குகளையும், பௌத்த மதத்தையும் அவமதிக்கும் வகையில் பிரசங்கங்கள் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் பணச் சலவைச் சட்டம் மற்றும் பொது ஒழுங்கை மீறியமை தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.