வேன் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; மோட்டார் சைக்கிள் சாரதி பலி

111 0
தும்மலசூரிய – விலத்தவ பிரதான வீதியில் தல்கடுவ பகுதியில் வேன் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இதுருவகே சம்சன் என்ற 63 வயதுடையவராவார்.

இவர் தும்மலசூரிய – விலத்தவ பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற போது தல்கடுவ பகுதியில் எதிரில் வந்த வேன் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றள்ளது.

காயமடைந்தவர் பிரதேசவாசிகளின் உதவியுடன் சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் போதே வழியிலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.