இஸ்ரேலில் பாலஸ்தீனியர்கள் காரால் மோதி தாக்குதல் – ஒருவர் பலி பலர் காயம்

133 0

இஸ்ரேலில் பாலஸ்தீனியர்கள் இருவர் காரால் மீது மோதி மேற்கொண்ட தாக்குதலில் பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

ரனானா நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட ஹெப்ரோனை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் இருவரும் சட்டவிரோதமாக இஸ்ரேலிற்குள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் ஒரேநேரத்தில் செயற்பட்டு இரண்டு கார்களை கடத்தி இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்