பௌத்த மதத்தை திரிபுபடுத்தி பிரசங்கம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மஹிந்த கொடிதுவக்கு என்ற அவலோகிதேஸ்வர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டிருந்துடன் வங்கி கணக்கு பதிவுகளையும் திரட்டுமாறும் கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, மஹிந்த கொடிதுவக்கு என்ற அவலோகிதேஸ்வரவுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி பல்வேறு தரப்பினர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
அத்துடன் குறித்த நபருக்கு எதிரான விசாரணைகளின் அறிக்கையை செவ்வாய்க்கிழமை (16) நீதிமன்றில் கையளிக்குமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பௌத்த மதத்தை இழிவுபடுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மகாநயக்க தேரர்கள் கடிதமொன்றை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

