11 குற்ற வழக்குகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் கைது

139 0

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் 11 குற்ற வழக்குகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ட சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சீதுவை, ராஜபக்சபுர பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவராவார்.

இவர் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் குறிப்பாக மோட்டார் சைக்கிள் திருட்டு, பணம் கொள்ளையடித்தமை போன்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடத்திலிருந்து 2 கைக்கடிகாரங்கள், ஒரு கைவளையல், தொலைக்காட்சிப் பெட்டி, 2 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும்  தங்க நகைகள் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.