முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், ஓ.பி.எஸ் அணியில் இணைந்தார்

218 0

சென்னையில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் அவரது அணியில் இணைந்தார். ராஜகண்ணப்பனுக்கு ஓ.பி.எஸ். சால்வை அணிவித்து வரவேற்றார்.

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன். 1991-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஜெயலலிதா அமைச்சரவையில் 1991-96 வரை அவர் பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தார்.பின்னர் ராஜகண்ணப்பன் அ.தி.மு.க வில் இருந்து விலகி மக்கள் தமிழ்தேசம் என்ற தனிக்கட்சியை தொடங்கினார்.

2001 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். 2006-ல் தனது கட்சியை கலைத்து விட்டு தி.மு.க.வில் இணைந்தார். 2006 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு அவர் இறையான் குடி தொகுதியில் வெற்றி பெற்றார்.

2009 பிப்ரவரி மாதம் எம்.எல்.ஏ பதவியை விட்டு விலகி அ.தி.மு.க வில் மீண்டும் இணைந்தார்.2009 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்திடம் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க இரண்டாக பிளவுபட்டது. சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் என இரண்டு அணிகளாக இருக்கிறது.இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் அவரது அணியில் இணைந்தார். ராஜகண்ணப்பனுக்கு ஓ.பி.எஸ். சால்வை அணிவித்து வரவேற்றார்.

ஓ.பி.எஸ். அணியில் இணைந்த ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-அ.தி.மு.க துணை பொதுச்செயலாளராக டி.டி.வி தினகரன் நியமிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் ஓ. பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்துள்ளேன். உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.எஸ்.அணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.