உண்ணாவிரதம் மேற்கொண்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விமல் வீரவங்சவிற்கு பிணை வழங்குவது குறித்து இன்று அறிவிக்கப்படவுள்ளது.
அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 9 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி முதல் அவர் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவர் உண்ணாவிரத போராட்டம் ஒன்றையும் மேற்கொண்டார்.
இந்த நிலையில் இன்று அவருக்கு பிணை வழங்குவது தொடர்பில் நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.
இதேவேளை, அவர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு தேசிய மருத்துவமனை நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

