யாழ் பல்கலைக்கழக சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

660 0

kajenthirakumar-300x206கடந்த 16ம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தும் ஊடக மாநாடு கட்சியின் யாழ்-கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றம் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இணைந்து நடாத்திய மேற்படி ஊடக மாநாட்டிலேயே கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழத்தில் கடந்த 16ம் திகதி விஞ்ஞான பீடத்திற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதல் சம்பவம் மிகவும் கவலைக்குரிய நிகழ்வாகும். கருத்து வேறுபாடுகள் பேசித் தீர்க்கப்படல் வேண்டும்.

பல இனங்களையும் மதங்களையும் சார்ந்தவர்கள் கல்வி பயிலும் யாழ் பல்கலைக்கழகத்தில் அனைத்து இன மத மாணவகளதும் கலாசார நிகழ்வுகளுக்கு வாய்ப்பளிக்கப்படல் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனினும் எந்தவொரு சந்தற்பத்திலும் பிதேசத்தினதும் மண்ணினதும் தனித்துவத்தை இழந்து செல்லலாம் என்னும் கருத்துடன் நாம் இணங்கவில்லை. பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் விடயங்களை இன்றுள்ள சம்பவங்களுடன் மட்டும் வைத்துப் பார்க்க முடியாது. மாறாக கடந்த பலதசாப்தங்களாக தமிழர் தாயகத்திலும்இ தமிழ் மாணவர்களின் கல்வியிலும் இடம்பெற்ற பாதிப்புக்களையும் சேர்த்தே நோக்க வேண்டும். அச் செயற்பாடுகளுக்கும் இன்று நடைபெற்றுள்ள சம்பவத்திற்கும் தொடர்புகள் நிறையவே உண்டு.