கொழும்பு, வாழைத்தோட்டத்தில் ஒருவர் வெட்டிக்கொலை

171 0
கொழும்பு, வாழைத்தோட்டம்  மார்டிஸ் லேனில் உள்ள வீடொன்றில் நேற்று (11) இரவு அத்துமீறி நுழைந்த நான்கு பேர் கொண்ட குழுவினர்  வீட்டின் உரிமையாளரைக் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முகம்மட் பாறூக் என்ற 48 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தப்பியோடிய கொலையாளிகள் வந்ததாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி மற்றும் இரத்தக்கறை படிந்த வாள் ஒன்றை பொலிஸார் கூறப்படும் சோண்டஸ் வீதியிலுள்ள வீடொன்றில் கைப்பற்றியுள்ளனர்.

கைத்தொலைபேசி  தொடர்பாக ஏற்பட்ட தகராறின் காரணமாகவே இந்தக் கொலை  இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.