போர் இல்லாத நாட்டில் பாதுகாப்புக்காக எதற்கு அதிக பணம்

92 0

போர் இல்லாத நாட்டில் பாதுகாப்புக்காக எதற்கு அதிகமான பணம் ஒதுக்கப்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் உள்ள இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு எட்டப்பட்டால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் படி 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் விடுதலைப்புலிகளுடனான போர் நிறைவடைந்து தற்போது 15 வருடங்கள் பூர்த்தியாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சுகாதாரத்துறையில் உள்ள பிரச்சினைகள் நாளாந்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிகளவான வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் நோக்கில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், மற்றுமொரு மக்கள் போராட்டத்துக்கு வழிவகுக்குமென அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,