யுத்தத்தை வென்ற படையினருக்கும் அரசியல் தலைவர்களிற்கும் பெரும் ஆபத்து

126 0
தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்திற்கான சட்ட மூலத்திற்கு தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அடிப்படையாக வைத்து மக்கள் ஏமாறக்கூடாது என தேசிய அமைப்புகளின் சம்மேளனத்தின் செயலாளர் வசந்தபண்டார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது பொதுமக்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கமும் தமிழ் அரசியல் கட்சிகளும் இணைந்து முன்னெடுத்த தந்திரோபாயம் என  அவர் தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலிற்கா பொதுஜனபெரமுனவும் ஐக்கிய மக்கள் சக்தியும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெனீவாவின்  அழுத்தங்கள் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட் தேசிய ஐக்கிய நல்லிணக்க அலுவலகத்தை மேலும் வலுப்படுத்துவதே இந்த சட்டமூலத்தின் நோக்கம் என வசந்த பண்டார தெரிவித்துள்ளார்..

சட்டமூலம் குறித்து சிவில்சமூகத்தின் வெளியிட்டுள்ள கரிசனைகளை நிராகரித்துள்ள தேசிய அமைப்புகளின் சம்மேளனத்தின் செயலாளர் வசந்தபண்டார அவர்கள் தங்களிற்கு நிதி வழங்குபவர்களை திருப்திபடுத்துவதற்கு எப்போதும் முயல்வார்கள் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

ஒஎன்யூர் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து நாடாளுமன்றத்தின்சட்டத்தின்  மூலம் உண்மை ஐக்கியம் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை ஏற்படுத்தும் நிலையில் அரசாங்கம் உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதும்  யுத்தத்தை வென்ற இராணுவத்தினரும் அரசியல் தலைவர்களும் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா வரைபடத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சட்டமூலங்களிற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது, அரசியல் நிச்சயமற்ற தன்மை தொடர்கின்ற போதிலும் அரசாங்கம் ஜெனீவா வரைபடத்தை தொடர்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.