ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

113 0

ஐஸ் போதைப்பொருளை கைமாற்ற முயன்ற யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றையதினம் (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் அவரிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றிருந்தார். இதன்போது திருகோணமலை பகுதிக்கு சென்று போதைப்பொருளினை கைமாற்ற முயன்றபோது யுக்திய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.