நியாயமான வரி சூத்திரமே நாட்டுக்குத் தேவை

169 0

தற்போது, நாட்டு மக்கள் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டு, சரியான உணவு வேளையொன்றையேனும் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும், கனம் உயர் நீதிமன்றத்தின் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தி வழக்கு தொடுத்து இதற்குக் காரணமானவர்கள் வெளிக்கொணரப்பட்ட நிலையில், பொருளாதார மந்தநிலையினால் தமது வியாபார முயற்சிகள் வீழ்ச்சியடைந்த குடிமக்களுக்கு, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய இவர்களிடமிருந்து நட்ட ஈட்டைப் பெற்றுக்கொள்ளும் முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் தம்மை தாக்க வந்தாலும் அது எதனையும் பொருட்படுத்ததாது நடந்து கொள்ள முடிந்ததாகவும், இந்தக் கேள்விகள் இன்றும் மீண்டும் கேட்கப்பட்டன என்றும், தான் எந்த சவால்களைக் கண்டும் தப்பி ஓடவில்லை என்றும், நாட்டு மக்களை வாழ வைப்பதே தனது ஒரே நோக்கம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 63 ஆவது கட்டமாக, இரத்மலானை கொத்தலாவலபுர மகா வித்தியாலத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று (10) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கல் கலாசாரம் எம்மிடம் இல்லை,

உயிரத்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுவை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதியும் பாரிய இழப்பீடுகளை செலுத்த வேண்டி நேரிட்டதாகவும்,இதன் பிரகாரம்,ஐக்கிய மக்கள் சக்தி தனது சட்டக் குழுவைப் பயன்படுத்தி,பொருளாதார வீழ்ச்சியினால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு நட்ட ஈடு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும்,இதில் எந்தவித அரசியல் பழிவாங்கல்களூம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

VAT விதிப்பதை விடுத்து நியாயமான வரி சூத்திரமே நாட்டுக்குத் தேவை,

திருடர்களைப் பிடித்து நாட்டிலிருந்து திருடப்பட்ட பணத்தை மீளக் கொண்டு வந்து நாட்டின் தேசிய வருமானத்தை அதிகரிப்பதா அல்லது VAT வரியை 18 வீதமாக அதிகரித்து தேசிய வருமானத்தை அதிகரிப்பதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டியிள்ளதாகவும், நாட்டுக்கு நியாயமான வரி சூத்திரமே தேவை என்றாலும் 18 வீதத்தால் VAT அதிகரிப்பதன் மூலம் இது மேற்கொள்ளப்படக் கூடாது என்றும், VAT என்பது திருடர்களை நம்பியிருக்கும்,திருடர்களின் வாக்குகளினால் தனது அடித்தளத்தை அமைத்துக் கொண்டு, திருடர்களை பாதுகாத்துக் கொண்டு விதித்த ஊழல் வரியே இது என்றும்,தாம் உள்ளிட்ட எதிர்க்கட்சி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரபஞ்சம், மூச்சு வேலைத்திட்டங்கள் சிறியதாக இருந்தாலும்,அதன் பயன் பரந்தபட்டது,

பிரபஞ்சம், மூச்சு வேலைத்திட்டங்கள் சிறிய வேலைத்திட்டமாக இருந்தாலும் இதன் பயன் பரந்த பட்டது என்றும்,சமூகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி வாய்ப்புக்கான மாற்று தெரிவுகள் வழங்கப்பட வேண்டும் என்றும், இவ்வாறான புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டால் அரச பாடசாலை கட்டமைப்பு மேம்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.