இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா – மன்னார் பிரதான வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியின் மறுபக்கத்திற்கு மாற முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் பயணித்துக் கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கில் வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட மோட்டார் சைக்களுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளமையுடன் இரு மோட்டார் சைக்கிள்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து. வருகின்றனர்.

