கிளிநொச்சியில் தேசிய நுளப்பு ஒழிப்பு வார பணிகள்

228 0

கிளிநொச்சி தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஜந்தாம் நாளான இன்று கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் சிரமதானம் மூலம் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்றைய நான்காம் நாள் நிறைவு வரையில் 4148 பொது இடங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 1128 இடங்களில் நுளம்புகள் வளருவதற்கு ஏதுவான வாழ்விடங்கள் என இனங்காணப்பட்டதுடன் 82 இடங்களில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்பட்டன.

இந்த, 1128 இடங்களில் 980 இடங்கள் சுத்திகரிக்கப்பட்டதுடன் 196 இடங்களில் நுளப்பு பெருக்கத்திற்கு ஏதுவான இடங்களை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டதாக மாவட்ட பொது சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.